''பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில்இருப்பதற்கு அன்புமணிதான் காரணம்'' *மா.கம்யூ., பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திண்டிவனம்: ''மோடியின் காலை பிடித்து மத்திய அரசில் அமைச்சராகிவிட வேண்டும் என்பதற்காக பெற்ற தந்தையை உதாசீனப்படுத்தியவர் அன்புமணி'' என்று முன்னாள் மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், நேற்று முன்தினம் இரவு, தி.மு.க.,தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சியின் வி.சி.,வேட்பாளர் வன்னி அரசுவை ஆதரித்து, மா.கம்யூ., முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசிதயதாவது:
ராமதாஸ் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதற்கு, தி.மு.க.,வி.சி.,காரணம் இல்லை. ராமதாஸ் மருத்துவமனையில்இருப்பதற்கு அன்புமணிதான் காரணம். அன்புமணியை பா.ம.க.,வின் தலைவராக்கினார் ராமதாஸ். ஆனால் அன்புமணி ராமதாசை வீதியில் துாக்கி எறிந்தது போல் எரிந்து விட்டார்.
அன்புமணியை பொத்தி, பொத்தி வளர்த்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராக்கியவர் ராமதாஸ். பெற்ற தந்தையை, கட்சியின் தலைவரை உதாசீனப்படுத்தி வெளியேற்றிவிட்டு, எப்படியாவது மத்திய அமைச்சரவையில் அமைச்சராக வேண்டும் என. நினைக்கிறார் அன்புமணி.
பழனிச்சாமியை பிடித்து எம்.பி., யாகிவிட்டு, மோடியின் காலை பிடித்து மத்தியில் அமைச்சராகிவிட வேண்டும் என்பதற்காக பெற்ற தந்தையை உதாசீனப்படுத்திய அன்புமணி தான். பெற்ற தந்தையான ராமதாசுக்கே இந்த நிலை என்றால், அவரை நம்பியுள்ள தொண்டர்களின் நிலை என்னவாகும் எனப் பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட வேட்பாளர் வன்னி அரசு பேசும் போது,'' திண்டிவனம் எம்.எல்.ஏ., அலுவலகத்தை அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,அர்ஜூனன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்த வில்லை. நான் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ.,அலுவலகத்தை பயன்படுத்தி, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற நடவடிக்கை எடுப்பேன்,' என்று பேசினார்.
மேலும்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
-
தி.மு.க. ரூ.2,500; அ.தி.மு.க. ரூ.1,500: ஒரு ஓட்டுக்கு விலை