சிறுபான்மையினர் தி.மு.க.,வுக்கு ஆதரவு
கோவை: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கூட்டம், ரத்தினபுரி மினி ஹாலில் நடந்தது. கூட்டத்துக்கு அமைப்பின் பொறுப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார்.
கோவை வடக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வனுக்கு ஆதரவு தெரிவித்து, வெற்றி பெற செய்வது என இக்கூட்டத்தில் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பெந்தகோஸ்தே சபையைச் சேர்ந்த, 30க்கு மேற்பட்ட சர்ச்சுகளில் இருந்து பாதிரியார்கள் மற்றும் ரோமன் கத்தோலிக்கர், சி.எஸ்.ஐ., சர்ச்சுகளின் நிர்வாகிகள், இக்கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
மா.கம்யூ., கோவை வடக்கு தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர குழு செயலாளர் நாராயணசாமி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், மாவட்ட செயலாளர் சாதிக் பாஷா மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
பழனியப்பா சி.பி.எஸ்.இ. பள்ளி :அவிநாசி தாலுகாவில் முதலிடம்
-
திருப்பூர் இனிதாக...
-
தேர்தல் குப்பை விவகாரத்தில் கண்காணிப்பு குழு: பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி
-
தேர்தலை முன்னிட்டு 3 நாள் மதுக்கடை மூடல்
-
ஹொசைரி நுால் விலை மேலும் உயர்வு: பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி
-
காங்கயத்தில் உதயநிதி பிரசாரம்