தேர்தல் குப்பை விவகாரத்தில் கண்காணிப்பு குழு: பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி
திருப்பூர்: ''குப்பை விவகாரத்தில் அனைத்து குறைகள் களையப்பட்டு, குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதை வெளிப்படையாக நடத்த, அனைத்து கட்சி உறுப்பினர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படும்,'' என்று, திருப்பூர் தெற்கு பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் ஓட்டு சேகரிப்பில் தெரிவித்தனர்.
திருப்பூர் தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் கூட்டணி கட்சியினருடன் வீடுகள் தோறும் சென்று மக்களிடம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதியில் வேட்பாளர் கூட்டணி கட்சியினருடன் சென்று ஓட்டு சேகரித்தார்.
பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்று, ஆரத்தி எடுத்தும், பூக்களை துாவியும் வரவேற்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சமுதாய தலைவர்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதில், கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதியில் கழிவு நீர் வெளியேறுவதில் நீண்ட நாட்களாக உள்ள பிரச்னை, குப்பை விவகாரம் உள்ளிட்டவை குறித்து தெரிவித்தனர். அனைத்து பிரச்னைகளையும் பொறுமையாக கேட்டறிந்த வேட்பாளர், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்த பின், அனைத்துக்கும் விடிவு காலம் பிறக்கும் என்று கூறினார்.
மறுசுழற்சி வெளிப்படை வேட்பாளர் தங்கராஜ் பேசியதாவது:
தாராபுரம் ரோடு, கரட்டங்காட்டில் கழிவு நீர் வெளியேறுவது தொடர்பாக உள்ள பிரச்னைக்கு தீர்வு காணப்படும். நகரில் உள்ள குப்பைகளை, நான்கு பிரிவுகளாக பிரித்து மக்களிடம் சேகரிக்கவும், குப்பைகளை தனித்தனியே பரித்து வாங்கி, அவற்றை உரமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். குப்பைகளை மறுசுழற்சி செய்யப்படுவதை வெளிப்படையாக நடத்த, அனைத்து கட்சி உறுப்பினர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.
துாய்மை பணியில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்த ஊதியம், போதிய அடிப்படை வசதியில்லாமல் உள்ளனர். அவர்களின் வாழ்வாத பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். துாய்மை பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படும். நகரின் பிரதான ரோடு, குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வசதி என, அடிப்படை விஷயங்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
கிருஷ்ணராயபுரம் தி.மு.க., வேட்பாளர் கடவூர் மேற்கு ஒன்றியத்தில் பிரச்சாரம்
-
குளித்தலையில் துணை மின் நிலையம் தி.மு.க., வேட்பாளர் சந்திரன் வாக்குறுதி
-
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
-
'தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்ற இ.பி.எஸ்., முதல்வராக வேண்டும்'
-
ஸ்கூட்டர் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் அ.தி.மு.க., வேட்பாளர் செல்வகுமார் உறுதி
-
என்னை ரொம்ப எளிதாக சந்திக்கலாம்: விஜய் உறுதி