சொன்னால் நிச்சயம் செய்வோம் :காங்., கர்நாடக அமைச்சர் உறுதி
கோவை: கோவையில் காங்., தேர்தல் அறிக்கையை கர்நாடக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் வெளியிட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இண்டி கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளை சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றும். கர்நாடக தேர்தலில் 5 உத்தரவாதங்களை அளித்தோம். மாதம் ரூ.2,000 தரும் கிரஹலட்சுமி திட்டம் உள்ளிட்ட அனைத்தையும் 3 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளோம்.
தமிழகம் செறிவான கலாசாரம் கொண்டது. தமிழக மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். காங்., காந்திய கொள்கையில் நம்பிக்கையுடையது.
பா.ஜ., பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறது. மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது. தமிழகம் மீண்டும் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர் கண்ணன், பெங்களூரு கோவிந்தராஜ் நகர் எம்.எல்.ஏ., பிரிய கிருஷ்ணா, காங்., மாவட்ட செயலாளர்கள் விஜயகுமார், ரங்கராஜன், சிங்காநல்லூர் தொகுதி காங்., வேட்பாளர் ஸ்ரீநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும்
-
பழனியப்பா சி.பி.எஸ்.இ. பள்ளி :அவிநாசி தாலுகாவில் முதலிடம்
-
திருப்பூர் இனிதாக...
-
தேர்தல் குப்பை விவகாரத்தில் கண்காணிப்பு குழு: பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி
-
தேர்தலை முன்னிட்டு 3 நாள் மதுக்கடை மூடல்
-
ஹொசைரி நுால் விலை மேலும் உயர்வு: பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி
-
காங்கயத்தில் உதயநிதி பிரசாரம்