போலீஸ் செய்திகள்:பெட்ரோல் குண்டுவீச்சு
சோழவந்தான்: பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி 48, தி.மு.க., கிளைச் செயலாளர். இவரது மகன் கோபிநாத் 21, இவரது நடவடிக்கை சரியில்லாததால் தந்தை கண்டித்தார். இதனால் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் நண்பர்களுடன் சேர்ந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடு, மினிசரக்கு வேனை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டார். போலீசார் வருவது தெரிந்தவுடன் தப்பினர்.
(ஏப்.15) இரவு 1:30 மணிக்கு அய்யனார் 20, தினேஷ்குமார் 19, முத்துக்கருப்பு 20 ஆகியோருடன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினார். பெட்ரோல் குண்டு ரோட்டில் விழுந்ததால் சேதம் ஏற்படவில்லை. சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement