காங்.,ல் பூசல் இல்லை வேட்பாளர்கள் மறுப்பு

கோவை: சிங்காநல்லூர் தொகுதி காங்., வேட்பாளர் ஸ்ரீநிதி, கவுண்டம்பாளையம் காங்., வேட்பாளர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் வெல்வது உறுதி எனத் தெரிந்ததும், காங்கிரஸுக்குள் உட்கட்சிப் பூசல் என எதிர்க்கட்சிகள் பொய்யான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கின்றன. அதில் உண்மை இல்லை.

எங்களுக்கு தங்கபாலு, செல்வப்பெருந்தகை, வெளிமாநில அமைச்சர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் பிரசாரம் செய்தனர். கோஷ்டிப் பூசல் இல்லை.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement