கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை
கோவை: கஞ்சா கடத்தல் வழக்கில், கேரளாவை சேர்ந்த மூவருக்கு தலா 2 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி ரோடு, மயிலேறிபாளையம் அருகே, 2020 பிப்., 14ல், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலம், கோழிக்கோடு, வடகரா பகுதியை சேர்ந்த பில் ஜூலல், 22, அர்ஜூன் பிரசாத்,22, பாலக்காடு, கல்லடைப்பு பகுதியை சேர்ந்த சாரங்,22 ஆகியோர் வைத்திருந்த பேக்கில், 4 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. மூவரையும் கைது செய்து, கோவை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரண்டாண்டு சிறை, தலா 30,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவகுமார் ஆஜரானார்.