அழகப்பா நகை மாளிகை அட்சய திருதியை அழைப்பு

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோடு அழகப்பா நகை மாளிகையில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை துவங்கியது.

இதுகுறித்து அழகப்பா நகை மாளிகை உரிமையாளர்கள் அழகப்பா மணி, அஸ்வின், அசோக் ஆகியோர் கூறியதாவது: கடலுார் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கையை பெற்ற 60 ஆண்டுகள் பழமையான எங்கள் நிறுவனத்தில் அட்சய திருதியை முன்னிட்டு நகைகள் விற்பனை நேற்று துவங்கியது. ஏராளமான வாடிக்கையாளர்கள் கடைக்கு வருகை தந்து, தங்களுக்கு பிடித்த நகையை தேர்வு செய்து வாங்கிச்சென்றனர்.

தொடர்ந்து நாளை (இன்று) இரண்டாம் நாளாக காலை விநாயகர் பூஜைக்குப்பின் 7:00 மணி முதல் விற்பனை துவங்குகிறது. ஆறு இலக்க (ஹெச்.யூ.ஐ.டி) முத்திரையுடன் முறையான ரசீதுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை முன்னிட்டு புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு உள்ளன. அட்சய திருதியை நன்னாளில் தங்கம் வாங்குவதால் மென்மேலும் செல்வ வளம் பெருகும். நினைத்த காரியம் கைகூடும் என தெரிவித்தனர்.

Advertisement