வாக்குறுதிகளை தாமதமின்றி நிறைவேற்றுவேன்: ஐ.ஜே.கே.,வேட்பாளர் வெங்கடேசன் உறுதி

குரோம்பேட்டை:பல்லாவரம் தொகுதி ஐ.ஜே.கே., வேட்பாளர் வெங்கடேசன், பொழிச்சலுார், அனகாபுத்துார், திருநீர்மலை, லட்சுமிபுரம், தர்கா ரோடு, கீழக்கட்டளை, மேடவாக்கம் மெயின்ரோடு, 200 அடி சாலை, குரோம்பேட்டை, கணபதி புரம் உள்ளிட்ட பகுதிகளில், வாகனத்தில் பேரணியாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

போதை இல்லாத பல்லாவரம், சாக்கடை இல்லாத பல்லாவரம், போக்குவரத்து நெரிசல் இல்லாத பல்லாவரம், சுத்தமான குடிநீர் வசதி கொண்ட பல்லாவரம், குற்றம் இல்லாத பல்லாவரம் ஆகிய இந்த ஐந்து வாக்குறுதிகளே, என் முக்கிய வாக்குறுதிகள்.

நான் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ., ஆனதும், இந்த ஐந்து வாக்குறுதிகளை தாமதமின்றி நிறைவேற்றுவேன்.

மேலும், தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வசதிகளை செய்து, மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவேன்.

தொகுதி மக்கள் எந்த குறையாக இருந்தாலும், என்னை எந்த நேரத்திலும் எளிதில் சந்தித்து, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் போர்கால அடிப்படையில் நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

பிரசாரத்தின் கடைசி நாளான, நேற்று, வெங்கடேசனுக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,- பா.ம.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், தொகுதி முழுதும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

***

Advertisement