ரோடுகளில் திரியும் காட்டு யானைகள்: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மூணாறு:சின்னகானல் பகுதியில் ரோடுகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மூணாறு அருகே சின்னகானல் பகுதியில் 15 காட்டு யானைகள் மூன்று குழுக்களாக சுற்றித் திரிகின்றன. தவிர தாக்குதல் சுபாவம் கொண்ட சக்கை (பலாபழம்) கொம்பன் எனும் ஆண் காட்டு யானையும் வலம் வருகிறது. அதனால் சின்னகானல் மற்றும் சுற்றிலும் வசிக்கும் மக்கள் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னகானல் விலக்கு பகுதியில் இருந்து சிங்குகண்டம் செல்லும் ரோட்டில் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாக காட்டு யானைகள் வலம் வருகின்றன. அந்த வழி பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய ரோடு என்பதால் காட்டு யானை நடமாட்டம் மூலம் மக்கள் மருத்துவம் உள்பட அவசர தேவைக்கு கூட வாகனங்களிலும், நடந்தும் செல்ல இயலாத ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வனத்துறை அதிரடிபடையினர் யானைகளை கண்காணித்து வருகின்றபோதும், அவற்றை உள் காடு மற்றும் வனங்களுக்குள் விரட்ட வேண்டும் கோரிக்கை எழுந்தது.

Advertisement