இங்கிலாந்து டெஸ்ட்: சான்ட்னர் விலகல்
ஆக்லாந்து: அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்தின் சான்ட்னர், காயம் காரணமாக விலகினார்.
அயர்லாந்து செல்லவுள்ள நியூசிலாந்து அணி, நான்கு நாள் போட்டி கொண்ட ஒரு டெஸ்டில் (மே 27-30, பெல்பாஸ்ட்) பங்கேற்கிறது. அதன்பின் இங்கிலாந்து மண்ணில் மூன்று போட்டி கொண்ட டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 4ல் லண்டன், லார்ட்சில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் லண்டன், ஓவல் (ஜூன் 17-21), நாட்டிங்காமில் (ஜூன் 25-29) நடக்கவுள்ளன.
இதில் அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் 34, விலகினார். இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த சான்ட்னர், சென்னைக்கு எதிரான போட்டியில் (ஏப். 23) 'பீல்டிங்' செய்த போது இடது தோள்பட்டையில் காயமடைந்தார். இத்தொடரில் இருந்து பாதியில் விலகிய இவர், சமீபத்தில் நாடு திரும்பினார்.
ஆக்லாந்தில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் போது, காயத்தில் இருந்து குணமடைய ஒரு மாதம் ஓய்வில் இருக்கும்படி சான்ட்னர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். காயத்தின் குணமடைவதை பொறுத்து, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் சான்ட்னர் விளையாடுவது முடிவாகும்.
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்