ஆசிய ஐஸ் ஹாக்கி: இந்தியா வெற்றி
பிஷ்கெக்: ஆசிய கோப்பை ஐஸ் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 8-1 என, மக்காவ் அணியை வீழ்த்தியது.
கிர்கிஸ்தானில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஐஸ் ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, கிர்கிஸ்தான், மங்கோலியா, மக்காவ், இந்தோனேஷியா, உஸ்பெகிஸ்தான் என, 6 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தோனேஷியா (6-9), உஸ்பெகிஸ்தான் (1-15) அணிகளிடம் தோல்வியடைந்த இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் மக்காவ் அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு கேப்டன் குர்தேஜ் சிங் பாட்டீ 4, அஜய் தாங்கி, இப்திகார் ஹுசைன், டான்ஜின் டாஷி, தேவன்ஷ் சர்மா தலா ஒரு கோல் அடித்தனர்.
இனி, 5-6வது இடத்துக்கான போட்டியில் (மே 2, 3) இந்தியா, மக்காவ் அணிகள் மீண்டும் மோத உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement