வேட்பாளர்கள் வாகன பேரணி நெரிசலில் திணறிய மக்கள்
சென்னை:வேட்பாளர்களின் கடைசி கட்டமாக நடத்திய பிரசாரமாக வாகன பேரணியால், சென்னையில் பல தொகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கடும் சிரமப்பட்டனர்.
சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் அவற்றின் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், நாம் தமிழர் - த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. பெரும்பாலான வேட்பாளர்கள், நேற்று காலை முதல் திறந்த ஜீப், வேனில் நின்றபடி, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களில், கட்சியினர் புடைசூழ வாகன பேரணியாக தொகுதியில் வலம் வந்து, கடைசி கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால், சென்னையில் பல தொகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொண்டன. இதனால், வாகன ஓட்டிகள், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
*