முந்தி செல்லும் போட்டியில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு
நீலாங்கரை: சாலையில், இரு வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தி செல்லும் போட்டியில், விபத்தில் சிக்கிய ஒரு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்ன நீலாங்கரையைச் சேர்ந்தவர் மனோஜ் குமார், 26; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று காலை, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் அக்கரை நோக்கி புறப்பட்டார்.
ஈஞ்சம்பாக்கம் அருகில் சென்றபோது, இவருக்கும், மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபருக்கும் முந்தி செல்வதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
வளைவு பகுதியில் அதிவேகமாக சென்றபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு வாகனங்களும் ஒரு ஆட்டோவில் மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த மனோஜ்குமார் மீது, இன்னோவா கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தப்பிய மற்றொரு வாலிபர், வாகனத்தை அங்கேயே போட்டு தலைமறைவானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழலற்ற ஆட்சியை விஜய் தருவார்:P த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் பேச்சு
-
இருசக்கர வாகன அணிவகுப்பில் ஓட்டு சேகரித்தார் சிற்றரசு
-
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
-
தவறான சிகிச்சையால் இளம்பெண் இறப்பு? மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை!
-
சென்னை சூப்பர் லீக் கால்பந்து :பச்சையப்பாஸ் எப்.சி., அபாரம்
-
சீனியர் லீக் கால்பந்து போட்டி: சென்னை போலீஸ் அபாரம்
Advertisement
Advertisement