விளையாட்டு சிட்டி கிளப் டென்னிஸ் தொடர் ரான்சா கிளப் அணி அபார வெற்றி

சென்னை: சிட்டி கிளப் டென்னிஸ் தொடரில், சென்னை, 'ரான்சா' டென்னிஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட கிளப்களுக்கு இடையிலான சிட்டி லீக் டென்னிஸ் தொடர், சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்ன.

அந்த வகையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள ரான்சா கிளப் மைதானத்தில் நடந்த போட்டியில் மெட்ராஸ் கிளப் அணி, ரான்சா கிளப் அணியை எதிர்த்து மோதியது.

போட்டியின் மூன்று பிரிவிலும் அசத்திய ரான்சா கிளப் அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

முதல் போட்டியில் ரான்சா கிளப் அணியின் கிருஷ்ணா சண்முகம் - விஜய் சண்முகம் ஜோடி, மெட்ராஸ் கிளப் அணியின் கபிலாண்டன் விஸ்வநாதன் - ஹரிஷங்கர் பாலாஜி ஜோடியை, 3 - 6, 6 - 1, 6 - 3 என்ற கணக்கில் வென்றது.

அடுத்த போட்டியில் ஸ்ரீராம் வெங்கடவரதன் - ஜீவன் வேலு ஜோடி, மெட்ராஸ் கிளப் அணியின் ஜார்ஜ் அலெக்சாண்டர் - விக்ரம் சேஷசாயீ ஜோடியை 3 - 6, 6 - 3, 6 - 2 என்ற கணக்கில் வென்றது.

மூன்றாவது போட்டியில், ரான்சா கிளப் அணியின் நகுல் நாகேஷ் - பிரணவ் ராஜேஷ் ஜோடி, மெட்ராஸ் கிளப் அணியின் கோகுல் ஆனந்த் - அர்னவ் ஹரிஷங்கர் ஜோடியை 6 - 3, 6 - 2 என்ற நேர்செட்டில் வென்றது.

போட்டி முடிவில், ரான்சா கிளப் அணி 3 - 0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Advertisement