ஸ்கூட்டர் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் அ.தி.மு.க., வேட்பாளர் செல்வகுமார் உறுதி
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் செல்வகுமார், க.பரமத்தி பஞ்., யூனியன் மொஞ்சனுார் பஞ்சாயத்தில், பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், கிராம பஞ்சாயத்துகள் அதிகம். கிராம பஞ்சாயத்தில் இருந்து படித்த பெண்கள், கரூர், வெள்ளகோவில், நொய்யல், புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்கள் குறித்த நேரத்தில், பாதுகாப்பாக வேலைக்கு சென்று திரும்பும் வகையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஸ்கூட்டர் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெண்களுக்கு கிடைத்த பெரும் பரிசாகும்.
தற்போது, 125 நாள் வேலை திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும். இதன் மூலம், கிராம பஞ்சாயத்துகளில் வேலை வாய்ப்பு பெருகி, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், பல ஆறுகள் செல்கிறது. அதன் மூலம், அனைத்து கிராமங்களுக்கும் துாய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமப்புறங்களில், தார் சாலைகள் அமைக்கப்பட்டு, மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மக்கள் முன்னேற்றத்துக்காக, எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி அ.தி.மு.க., பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெண்கள் தலை நிமிர பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அவர்களது வழியில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த, 2016-21ல் நான்கு ஆண்டுகள் இரண்டு மாதம், சிறப்பான ஆட்சியை கொடுத்தார். இதனால், மீண்டும் இ.பி.எஸ்., தலைமையில் அ.தி.மு.க., ஆட்சியை ஏற்படுத்த, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யும்படி கேட்டு கொள்கிறேன். தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை, அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பிறகு, மொஞ்சனுார் கிராம பஞ்சாயத்தில் பூண்டிப்பாளையம், பூமேடு, கஸ்துாரிபாளையம், மீனாட்சி வலசு, கள்ளமேடு, குமாரப்பாளையம், ரெட்டி வலசு, அகிலாண்டபுரம், வைரமடை, எல்லை காட்டு வலசு உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் செல்வகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மேலும்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு