குளித்தலையில் துணை மின் நிலையம் தி.மு.க., வேட்பாளர் சந்திரன் வாக்குறுதி

குளித்தலை, கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில் மணத்தட்டை, அக்ரஹாரம், தெவதானம், திருவள்ளுவர் நகர், நாப்பாளையம், சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில், தி.மு.க., வேட்பாளர் சந்திரன், வீடு வீடாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு
சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தாயுமானவர் திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, தாயுமானவர் திட்டம், காலை உணவுத் திட்டம், தோழி தங்கும் விடுதி என தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாது சொல்லாத பல வாக்குறுதிகளையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
துணை மின் நிலையம்
குளித்தலை கடம்பர்கோவில் பகுதியில் சுற்றுலா பூங்கா மற்றும் நடை பயிற்சி மையம், குளித்தலையில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். வாலாந்துார் கிராம பொதுமக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த ரயில்வே பாதையை குகை வழி பாதையாக அமைக்கப்படும்,
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை இருவழி சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 8,000 ரூபாய் கூப்பன், மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாய் உயர்த்தி தருதல், புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு உதவித்தொகை, 1,500 ஆக ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
திராவிட மாடல் அரசு 2.0 மகளிருக்கான அரசாக இருக்கும். ஒரு குடும்பத் தலைவி தான் குடும்பத்தை வழிநடத்தி செல்கிறார் என்ற அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்
படுகிறது.
பால் கொள்முதல் விலை உயர்வு
கிராம பகுதிகளில் பெரும்பாலானவர்கள் விவசாயத்துடன் கால்நடைகளையும் சேர்த்து வளர்த்து வருகிறீர்கள். தற்போது பால் கொள்முதல் விலையை, ஐந்து ரூபாயாக உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் விவசாயிகளுக்கு மின் மீட்டர் பொருத்தாத இலவச மின் மோட்டார்கள் வழங்கப்படும். சுய உதவிக் குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில் பிணை ஏதுமின்றி, ரூபாய் 5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.
பயிர்களுக்கு கடன்
பேரிடர் கால இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு இறவை பாசனப் பயிர்கள் மற்றும் நெல் பயிர்கள் -ரூபாய் 25,000 ஆகவும், நீண்டகாலப் பயிர்கள் - ரூபாய் 27,000 ஆகவும், மானாவாரி பயிர்கள் -12,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும். தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் தெரிவித்துள்ள கோரிக்கைகளை குறிப்பெடுத்து
வைத்-துள்ளேன்.
வெற்றி பெற்றதும், மக்களின் கோரிக்கைகளுக்கு நட-வடிக்கை எடுக்கப்படும். மேலும், தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள், பிற மாநிலங்களே வியக்கும்படி உள்ளது.
வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும்
மீண்டும் முதல்வராக ஸ்டாலின் தான் வருவார். தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் செயல்-
படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பிரச்சாத்தில், மாநில வர்த்தக அணி துணை செயலர் பல்லவிராஜா. நகராட்சி தலைவர் சகுந்தலா, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி மாணிக்கம். நகர துணை செயலாளர் செந்தில். நகர இளைஞரணி அமைப்பாளர் விஜய்பிரந்தாவன், நகர பொருளாளர் தமிழரசன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர்
பங்கேற்றனர்.

Advertisement