என்னை ரொம்ப எளிதாக சந்திக்கலாம்: விஜய் உறுதி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு த.வெ.க., சார்பில், 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டார்.
த.வெ.க., சார்பிலான வாக்குறுதிகளை, பிரசாரத்தின்போது விஜய் அவ்வப்போது அறிவித்தார். அவற்றை ஒருங்கிணைத்து அறிக்கையாக வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடந்தது.
அதன்படி, ஹோட்டலுக்கு மாலை 3:00 மணிக்கே விஜய் வந்தார். இருப்பினும் தன் ஆஸ்தான ஜோதிடர், 3:45 மணிக்கு தான் நிகழ்ச்சியை நடத்த நேரம் குறித்திருந்தார்.
அதன்படி, சரியாக 3:46 மணிக்கு அறம், பொருள், இன்பம் என்ற தலைப்புகளின் கீழ், 94 பக்கங்கள் கொண்ட, 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை விஜய் வெளியிட்டார்.
பின், விஜய் பேசியதாவது: ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம்; மற்றவர்கள் போல் அள்ளி விடும் அவசர அறிக்கை இது இல்லை. தி.மு.க.,வும் மற்றும் பலரும் ஒன்று தான் என்பதற்கு, அவர்களின் தேர்தல் அறிக்கையை பார்த்தாலே தெரியும். ஒருத்தர் 10,000 ரூபாய் கொடுத்தால், இன்னொருத்தர் 8,000 ரூபாய்க்கு கூப்பன் கொடுக்கிறார்.
ஒருத்தர் ப்ரிஜ் கொடுத்தால், இன்னொருத்தர் ப்ரிஜ் வாங்க கூப்பன் கொடுக்கிறார். இரண்டு பேருமே மீனவர்களுக்கு 12,000 ரூபாயும், பெண்களுக்கு 2,000 ரூபாயும் கொடுக்கின்றனர். இருவரும் பெயரை, கலரை மாற்றி, தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். ஆனால், இந்த ஊழல் கூட்டம் போல் நான் ஏமாற்ற மாட்டேன்.
தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களும், ஏற்கனவே பிரசார கூட்டங்களில் நான் அறிவித்தவை தான்.பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு, எம்.எல்.ஏ.,வாக மாதம் ஒரு முறை வருவேன். என்னை நீங்கள் ரொம்ப எளிதாக சந்திக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
த.வெ.க.,வின் முதல் தேர்தல் அறிக்கையின் பிரதியை, விவசாயிக்கு வழங்குவதாக கூறி, நாராயணன் என்பவருக்கு விஜய் வழங்கினார். பதிலுக்கு நெற்கதிர்களை நாராயணன் கொடுத்தார்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவருக்கும், திருநங்கை ஒருவருக்கும், தேர்தல் அறிக்கையை விஜய் வழங்கினார். அதோடு எல்லா மதமும் சம்மதம் என கூறி, ஒரு ஹிந்து, ஒரு கிறிஸ்துவர், ஒரு முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு தேர்தல் அறிக்கை புத்தகம் வழங்கப்பட்டது. அந்த புத்தகத்தை, மேடையில் வைத்தே மீண்டும் வாங்கி விட்டனர்.
தேர்தல் வாக்குறுதியில் பெண்களை கவரும் இலவச அறிவிப்புகளே அதிகம் உள்ளன.
@block_B@ அருண்ராஜ் 'அப்செட்'; செங்கோட்டையன் 'ஆப்சென்ட்'
வழக்கமாக, எல்லா கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரித்த குழுவுக்கு நன்றி சொல்வது வழக்கம். ஆனால், த.வெ.க., தேர்தல் அறிக்கையை தயார் செய்த கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலர் அருண்ராஜ் தலைமையிலான குழு குறித்து, விஜய் எதுவுமே சொல்லவில்லை. இதனால், அருண்ராஜ் உள்ளிட்ட அறிக்கை தயாரிப்பு குழுவினர், 'அப்செட்' ஆகி விட்டனர். அதேபோல், பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, த.வெ.க., நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவில்லை.block_B
@block_P@ குத்தாட்டம் போட்ட த.வெ.க.,வினர்; ரசித்து பார்த்த விஜய்
தேர்தல் அறிக்கை வெளியிடும் முன், த.வெ.க.,வின் பிரசார பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதை கேட்டு உற்சாகமான த.வெ.க., பெண் தொண்டர்கள், சேர் மீது ஏறி குத்தாட்டம் போட்டனர். அதை மேடையில் இருந்தபடி விஜய் ரசித்து பார்த்தார்.block_P
வாசகர் கருத்து (9)
பிரேம்ஜி - ,
17 ஏப்,2026 - 19:02 Report Abuse
சூப்பர் ஜோக்! இந்த நூற்றாண்டில் இதுதான்! 0
0
Reply
venugopal s - ,
17 ஏப்,2026 - 18:33 Report Abuse
யார் எளிதாக சந்திக்க முடியும்? ஓ, அவரா? எனக்கு தெரிந்து விட்டது! 0
0
Reply
venugopal s - ,
17 ஏப்,2026 - 18:32 Report Abuse
யார் எளிதாக சந்திக்க முடியும்? ஓ, அவரா? எனக்கு தெரிந்து விட்டது! 0
0
Reply
முருகன் - ,
17 ஏப்,2026 - 15:35 Report Abuse
தலைவர் அனுமதி வாங்கி விட்டு ஜந்து நட்சத்திர ஓட்டலில் சந்திக்க முடியும்
அதுவும் மலை 6 மனிக்குள் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
17 ஏப்,2026 - 10:41 Report Abuse
எங்க துக்ளக் மன்னர் கூட 2021 தேர்தல் பரப்புரையில் இப்படித்தானுங்க பேசுனாரு ...... 0
0
Reply
விஸ்வ நாதன் - ,
17 ஏப்,2026 - 08:49 Report Abuse
வெற்றி பெறுவாரா? 0
0
Reply
அருண், சென்னை - ,
17 ஏப்,2026 - 07:41 Report Abuse
Best of luck VJ... நீங்கள் உங்க ரசிகர்களை சந்தித்து முடிக்க சரியா 5 வருஷம் ஆகும், அடுத்த 2029 சந்திக்கலாம்... 0
0
Reply
Sun - ,
17 ஏப்,2026 - 06:44 Report Abuse
அரசியலில் விஜய் அடித்த ஆகச் சிறந்த ஜோக் என்னை எளிதில் சந்திக்கலாம் என்பது! 0
0
Reply
Prem - ,
17 ஏப்,2026 - 06:34 Report Abuse
எப்படி?
உங்க பாடிகார்ட், வேனில் ஏற முயன்றவரை பூட் காலால் மிதித்து இறக்கி விட்டார்களே, அது போலவா? 0
0
Reply
மேலும்
-
6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள்: சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
-
மகனை முதல்வராக்குவது தான் ஸ்டாலின் குறிக்கோள்: ஈரோடு ரோடு ஷோவில் அமித்ஷா பேச்சு
-
தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்
-
இலங்கையில் சிபிஆருக்கு உற்சாக வரவேற்பு
-
வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு: கடைசி நேரத்தில் விஜய் திடீர் முடிவு
Advertisement
Advertisement