மத மாற்றத்தை சட்டங்களால் தடுக்க வேண்டும் வி.எச்.பி., இணை பொதுச் செயலர் அழைப்பு
புதுடில்லி,'மத மாற்றம் இந்த நாட்டின் பாதுகாப்பு விடப்பட்டுள்ள சவால். நாடு முழுமைக்குமான சட்டம் வாயிலாகத் தான் இந்த கொடுமையை தடுத்து நிறுத்த முடியும்' என, வி.எச்.பி., என அழைக்கப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறினார்.
மஹாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள டி.சி.எஸ்., எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றிய எட்டு இளம்பெண்கள், தங்களை மத மாற்றம் செய்ய ஒரு கும்பல் முயன்று வருகிறது. அந்த கும்பல், அதற்காக எங்களை பாலியல் ரீதியாக அத்துமீறுகிறது என புகார் அளித்திருந்தனர். அதுகுறித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்து, டி.சி.எஸ்., நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'எங்கள் நிறுவனத்தில் மத மாற்றம் நடைபெறுவதை ஏற்க முடியாது. அது போல, பாலியல் ரீதியான அத்துமீறல் தொடர்பான புகார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாசிக் விவகாரம் குறித்து, வி.ஹெச்.பி., அமைப்பின் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாசிக்கில் உள்ள டி.சி.எஸ்., நிறுவனத்தில் மட்டும் தான் இதுபோன்ற மத மாற்ற செயல்கள் நடந்தன என்று இல்லை. குருகிராம், ஹுப்ளி, ஹைதராபாத் என பல நகரங்களில் நடைபெற்றுள்ளது. அந்த நகரங்களில் உள்ள மிகப் பெரிய தொழில்நுட்ப நகரங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளது.
இதை, நாடு முழுமைக்குமான சட்டம் மூலம் தான் கட்டுப்படுத்த முடியும். தேசத்திற்கே ஆபத்தானது மத மாற்றம். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையேல், மிகப் பெரிய அச்சுறுத்தலாக இது அமையும்.
ஹிந்து இளைஞர்கள் பலர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதை இனியும் அனுமதிக்க முடியாது. மத மாற்றங்களை தடுக்க, நாடு முழுமைக்கும் பொதுவான, கடுமையான சட்டங்கள் அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தி.மு.க., வில் ஐக்கியம்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு