மா.அரங்கநாதன் இலக்கிய விருது

சென்னை: மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழா, சென்னையில் இன்று நடக்கிறது.

படைப்பாளி மா.அரங்கநாதனின் நினைவை ஒட்டி, 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 2018 ஏப்., 16 முதல், மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், ஆராய்ச்சி நுால்கள், கவின்கதை, விமர்சனம், மொழிப்பெயர்ப்பு என, இலக்கியத் துறையில் பங்களிப்பை வழங்கி வரும் படைப்பாளிகள் இருவருக்கு இலக்கிய விருது வழங்கப்படுகிறது. அத்துடன், ஒரு லட்ச ரூபாயும் பரிசும் வழங்கப்படுகிறது.

இவ்விழா இன்று மாலை 6:00 மணிக்கு, ராணி சீதை அரங்கில் நடக்கிறது. விருதுகளை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

படைப்புலகில் இயங்கும் அனைவராலும் உயரிய விருதாக கருதப்படும் மா.அரங்கநாதனின் இலக்கிய விருது, இந்தாண்டுக்கு, எழுத்தாளர் கி.விட்டல்ராவ், அம்ஷன்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

Advertisement