பெண் கொலை வழக்கில் தம்பதியை தேடும் போலீஸ்
சிவகங்கை:சிவகங்கை அருகே தனியாக வசித்த பெண்ணை வெட்டி கொன்று உடலை கிணற்றில் வீசி சென்ற வழக்கில் சந்தேகம் படும் தம்பதியினரை போலீசார் 4 நாட்களாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை அருகே சுந்தரநடப்பு கிராமத்தில் ஏப்.12 அன்று கணவரை பிரிந்து தனியாக வசித்த சுசீலா 42 என்ற பெண்ணை வெட்டி கொன்று உடலை கிணற்றில் வீசி சென்றனர்.
வழக்கு பதிந்த தாலுகா போலீசார் சந்தேகம் படும் படியான 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். போலீசாரிடம் சிக்கிய சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் ஒரு தம்பதியினரை சந்தேகப்பட்டு அவர்கள் குறித்து திருச்சி, அரியலுார் உள்ளிட்ட பகுதியில் தேடி வருகின்றனர். போலீசார் கூறுகையில், இந்த கொலை சொத்திற்காக நடந்துள்ளதா, அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒரு சில தகவல்கள் கிடைத்துள்ளது. எஸ்.ஐ., தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஓரிரு தினங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றனர்.
மேலும்
-
அனைத்து ஊராட்சிகளிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும்: கார்த்திக் தண்டபாணி
-
அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக 'செல்பேசி' செயலி: பாலு வாக்குறுதி
-
கோவில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: பக்தர்கள் அவதி
-
வரும் 1ல் 'மெட்ரோ' பயணியர் அட்டை சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்
-
வாக்குறுதிகளை தாமதமின்றி நிறைவேற்றுவேன்: ஐ.ஜே.கே.,வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
-
தொகுதி வளர்ச்சியை பார்த்து மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள்: காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா பிரசாரம்