பழுதடைந்த மின்கம்பம் மாற்றம்
எஸ்.புதுார்:எஸ்.புதுாரில் பழுதடைந்த மின்கம்பம் தினமலர் செய்தி எதிரொலியாக மாற்றப்பட்டது.
இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மின்கம்பம் உருக்குலைந்து, கான்கிரீட் கம்பி தெரியும் நிலையில் இருந்தது. மழைக்காலங்களில் மின்கம்பத்தில் மின்சாரம் பாய்வதாகவும், காற்றடிக்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். இது குறித்து தினமலரில் ஏப். 15 ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று மின்வாரிய அதிகாரிகள் பழைய மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பத்தை அமைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குமரியில் நாளை ராகுல் பிரசாரம்
-
ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்: நா.த.க., சீமான் சாபம்
-
ஓடும் பஸ்சில் மாரடைப்பு: 50 பயணிகளை காப்பாற்றி தனியார் பஸ் டிரைவர் மரணம்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் வெற்றி ஐ.ஏ.எஸ்., மாணவர்கள் சாதனை
-
உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை டிரோன் பறக்க தடை
-
குடும்ப தகராறில் மனைவியை கொன்ற பூ வியாபாரி தற்கொலை
Advertisement
Advertisement