தி.மு.க., நிர்வாகி வீட்டில் வேட்டி, சேலை பறிமுதல்
வடமதுரை: வாக்காளர்களுக்கு வழங்க, தி.மு.க., நிர்வாகி வீட்டில் பதுக்கப் பட்டிருந்த வேட்டி, சேலைகளை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, ஏ.வி.பட்டியில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, தி.மு.க., நகர துணை செயலர் வீரமணி வீட்டில், பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.
தேர்தல் பறக்கும் படை அலுவலர் லோகேந்திரன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு, வீரமணி வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த, 197 வேட்டி, 120 சேலைகளை பறிமுதல் செய்தனர். இதை, வேடசந்துார் தொகுதி, தேர்தல் உதவி அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளியுங்கள் பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
கிராவல் மண் திருட்டு: இருவர் மீது வழக்கு
-
ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
-
விளையாட்டு விழா பரிசளிப்பு
-
சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; இருவர் கைது
-
மோகனை வெற்றி பெற செய்யுங்கள்: அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சம்பத் பேச்சு
Advertisement
Advertisement