மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வேன் ஆத்துார் காங்., வேட்பாளர் வாக்குறுதி

ஆத்துார்: ஆத்துார் தொகுதி, காங்., வேட்பாளர் அர்த்தனாரி, ஆத்துார் நக-ராட்சி, 28, 29வது வார்டுகளுக்கு உட்பட்ட ஜோதி நகர், அம்-பேத்கர் நகர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று, கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:


தி.மு.க., ஆட்சியில், உங்களுடன் ஸ்டாலின், மகளிர் உரிமைத்-தொகை, புதுமைப்பெண், விடியல் பயணம், காலை உணவு திட்டம், மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினி உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. துணை முதல்-வராக ஸ்டாலின் இருந்தபோது, அம்மம்பாளையத்தில் சமத்துவ-புரம், நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் திட்டங்கள், வேளாண் திட்-டங்கள் செயல்படுத்தப்பட்டன.வேளாண் துறையில், தனி பட்ஜெட் திட்டம் மற்றும் பொதுப்ப-ணித்துறையில் நீர்வளத்துறை என, தனியே அமைச்சர் கொண்டு வந்ததும், முதல்வர் ஸ்டாலின் தான். ஆத்துாரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சாலைகள் விரிவாக்கம் போன்றவையும், இத்தொகுதி மக்களுக்கு கிடைத்துள்ளன. பல்வேறு சாதனைகள் தொடர, மீண்டும் தி.மு.க.,வை வெற்றி பெறவைக்க வேண்டும். உங்களில் ஒருவனாக இருந்து தொகுதி மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வேன்.
ஆத்துார் தொகுதியில் உள்ள பிரச்னைகள், மக்களின் பிரதான கோரிக்கைகளை நன்கு அறிந்துள்ளேன். இத்தொகுதிக்கு புதி-யவன் இல்லை; இரு முறை தோல்வி அடைந்தாலும் 3ம் முறை மீண்டும் மக்களை தேடி வந்துள்ளேன். தி.மு.க., ஆட்சியின் சாதனை திட்டங்கள் மூலம் நான் வெற்றி பெறுவேன் என, நம்-பிக்கை உள்ளது. சிறுபான்மையினரின் நம்பிக்கையுள்ள கட்சிக-ளாக, தி.மு.க., - காங்., கூட்டணி மட்டுமே உள்ளது. மதவாத கட்சிகளுக்கு, தமிழக மக்கள் ஆதரவு தரமாட்டார்கள். தமிழ-கத்தில், தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்து, பல்வேறு திட்டங்-களை செயல்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
இவருடன், தி.மு.க., காங்., வி.சி., தே.மு.தி.க., ம.தி.மு.க., கொ.ம.தே.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisement