இ.பி.எஸ்.,க்கு ஆதரவாக ஓட்டு கேட்ட நிர்வாகிகள்
இடைப்பாடி: இடைப்பாடி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர், இ.பி.எஸ்.,க்கு ஆதரவு கேட்டு நங்கவள்ளியில், கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரித்-தனர்.
இடைப்பாடி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., போட்டியிடுகிறார். அவருக்கு ஆதர-வாக, டவுன் பஞ்சாயத்து செயலர் சேகர், நங்கவள்ளி தெற்கு ஒன்-றிய செயலர் மாணிக்கவேல் ஆகியோர், நங்கவள்ளி டவுன் பஞ்-சாயத்து, ஒன்றிய பகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்கி, இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டனர். குறிப்பாக நங்கவள்ளி கடைவீதியில் உள்ள ஜவுளி உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஓட்டு சேகரித்தனர்.அப்போது கூடியிருந்த
மக்களிடம், செயலர் சேகர்
பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்க-ளுக்கும், 10,000 ரூபாய் வழங்கப்படும். விவசாய பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். குலவிளக்கு திட்டத்தில் ரேஷன் கார்டு மூலம் மகளிருக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்-டுக்கும் ஆண்டுக்கு, 3 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் பிரிட்ஜ் வழங்கப்படும். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள அனைத்து கோரிக்கை-களும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஓட்டு சேகரித்-தனர். அப்போது நங்கவள்ளி தெற்கு ஒன்றிய செயலர் மாணிக்-கவேல், மாவட்ட மகளிர் அணி இணை செயலர் பானுமதி, பால-சுப்ரமணியன், ஒன்றிய பொருளாளர் மணிவேல், வார்டு செயலர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அதேபோல் நேற்று முன்தினம் வனவாசியில் தலைமை கழக பேச்சாளர் தன்ராஜ், இ.பி.எஸ்.,க்கு ஓட்டு கேட்டு பேசியதாவது:
நாட்டில் நான் தான் நம்பர் 1 முதல்வர் என, ஸ்டாலின் கூறி வரு-கிறார். கஞ்சா இருப்பதில் ஸ்டாலின் தான் நம்பர் 1. கஞ்சா விற்ப-வர்களுக்கு எல்லாம், தி.மு.க.,வில் கட்சி பொறுப்பு வழங்கப்பட்-டிருக்கிறது. இப்படி இருப்பவர் நம்பர் 1 முதல்வரா?
'நீட்' தேர்வை தமிழகத்துக்கு கொண்டு வந்தது யார்? தி.மு.க.,வில், அமைச்சராக இருந்த காந்திசெல்வன் தான். அன்று மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் தி.மு.க., நீட் தேர்வை கொண்டுவந்தது. தற்போது தி.மு.க., நீலிக்கண்ணீர் வடித்து வருகிறது. அனைவரிடமும் மொபைல் போன் உள்ளது. அதை எடுத்து கூகுளில் சென்று ஊழலின் தந்தை யார் என அடித்து பாருங்கள். கருணாநிதி என்று தான் பெயர் வரும். இதுதான் சரித்திர சாதனை.
அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுதும் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டுக்கு எல்லாம் கருணாநிதி பெயரை வைத்திருக்கிறார். இன்னும் தமிழகத்தில் கழிப்பறைகளுக்கு மட்டும் தான் கருணா-நிதி பெயரை வைக்கவில்லை. மற்ற இடங்களுக்கு எல்லாம் கரு-ணாநிதி பெயரை வைத்து வருகிறார் ஸ்டாலின்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
தொழிலதிபர் வீட்டில் புகுந்து துணிகர கொள்ளை: சொகுசு வாகனத்தில் தப்பிய கும்பலுக்கு வலை
-
போலி சான்றிதழ் கொடுத்த தலைமையாசிரியரும் கைது
-
தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும்; வேட்பாளர் சரவணன் உறுதி
-
ஸ்டாலின் ஆட்சி அமைப்பது உறுதி: பிரேமலதா திட்டவட்டம்
-
விழுப்புரம் திருநங்கை கூட்டமைப்பு தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு
-
பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டு சேரிப்பு