விழுப்புரம் திருநங்கை கூட்டமைப்பு தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு  

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட திருநங்கையர் கூட்டமைப்பினர், மாவட்ட செயலர் லட்சுமணனை சந்தித்து தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்தனர்.விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் கூட்டமைப்பினர், மாவட்ட தலைவர் விமலா தலைமையில், நேற்று விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணனை நேரில் சந்தித்து, தி.மு.க.,வுக்கு ஆதரவளித்தனர்.

விழுப்புரம் தொகுதி தி.மு.க., தேர்தல் அலுவலகத்திற்கு திரண்டு வந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள், விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளரான லட்சுமணனை சந்தித்து, திருநங்கைகள் சமூகத்தினர், இத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, லட்சுமணன் எம்.எல்.ஏ., வரவேற்றார்.திருநங்கை கூட்டமைப்பினர் கூறியதாவது: தமிழகத்தில், திருநங்கைகளுக்கு கவுரவமான பெயரைச்சூட்டி பெருமை படுத்தியவர் மறைந்த முதல்வர் கருணாநிதிதான்.

தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியில் நலவாரியம், வீட்டுமனை பட்டா, அரசு வேலை வாய்ப்பு, கல் வீடுகள், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, மானிய கடனுதவி போன்ற உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், திருநங்கையர்களுக்கு பல நலத்திட்டங்களை செய்கின்றனர். இந்த தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் லட்சுமணன் உள்ளிட்ட மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவோம் என்றனர்.

Advertisement