தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கறுப்பு கொடி கட்டிய மக்கள்

தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்-டுகள் உள்ளன. அதில், 13வது வார்டு, கும்பகொட்டாயில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 20 ஆண்-டாக குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்-படை வசதிகள் செய்துதரவில்லை என கூறி, வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, ஊர் நுழைவு, தெரு, வீடு-களில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'அடிப்படை வசதி கேட்டு பல-முறை மனு அளித்தும், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்கவில்லை. வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணித்து கறுப்பு கொடி கட்டியுள்ளோம்' என்றனர்.

Advertisement