வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு பூட்டு: அரசியல் சண்டையால் திடீர் முடிவு
சிதம்பரம்: தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வாட்சப் குழுக்களில், எதிர் எதிர் கட்சியினர் மோதல் அதிகரித்து வந்த நிலையில், பிரச்னையை தவிர்க்கும் வகையில், பல்வேறு வாட்சப் குழுக்கள், 'ஆட்மின் ஒன்லி ' என மாற்றப்பட்டுள்ளன.
தமிழ கத்தில் வரும், 23ல் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது அனல் பறக்கும் பிரசாரம் மற்றும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக அவரவர் சார்ந்த கட்சிகளின் சாதனைகள், பெருமைகளை சொல்லி வாட்சப் குழுவில் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தற்போது வாட்சப் குழுக்களில் முற்றிலும் அரசியல் பதிவுகளே அதிகரித்து வருகிறது. இதனால் மாறி மாறி கட்சியினர் சண்டையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. பல சமயங்களில் காரசார விவாதங்கள் துவங்கி சண்டை வரை சென்று, காவல் நிலையங்களில் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்று விடுகிறது.
இதுபோன்று சமயங்களில் வாட்சப் அட்மின்களுக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, கடலுார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும், வாட்சப் குழுக்களின் அட்மின்கள், இதுபோன்ற அரசியல் பிரச்னைகளை சமாதானப்படுத்தி ஓய்துபோனதுதான் மிச்சம். என்ன சொன்னாலும் அரசியல் ஆதரவாளர்கள் ஒருவரக்கொருவர் சண்டையிடுவதை நிறுத்துவதாக இல்லை.
இதுபோன்ற பிரச்னைகள் தொடர்து வருவதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாகவே, வாட்சப் குழுக்களின் அட்மின்கள், 'அட்மின் ஓன்லி' மோடுக்கு தங்கள் வாட்சப் குழுக்களை மாற்றியுள்ளனர்.
இதன் காரணமாக அரசியல் சார்பாளர்கள் ஒருவரை ஒருவர் திட்டக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அட்மின் அன்லி மோடுக்கு வாட்சப் குழுவை மாற்றியதால் அட்மினும் தற்போது பிரச்னையின்றி நிம்மதியடைந்துள்ளனர்.
தேர்தல் முடிந்த பின்பே, வாட்சப் குழுக்களில் அனைவரும் பதிவிடும் வகையில், மீண்டும் மாற்றப்படும் என பல அட்மின்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
ரூ.60 லட்சம் நிலமோசடி : உறவினர்கள் இருவர் கைது
-
மக்களுடன் நிற்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே: தி.நகர் சத்யா
-
தலையில் விழுந்த குடம்: நனைந்த தி.மு.க., நிர்வாகிகள்
-
வார்டு தோறும் மருத்துவ கிளினிக் இலவசமாக நடத்தப்படும்: தமிழிசை
-
குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடும் சூழலை ஏற்படுத்தி தருவேன்: கார்த்திக் மோகன் உறுதி
-
வாரத்தின் ஏழு நாட்களும் எம்.எல்.ஏ., ஆபீஸ் இயங்கும் :அ.தி.மு.க.,- கந்தன் உத்தரவாதம்