டூவீலர் மீது டிராக்டர் மோதல்: பெண் சாவு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே டூவீலர் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்-ளானதில், டூவீலரில் வந்த, பெண் சம்பவ இடத்திலேயே பலி-யானார்.


பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நர-சிம்மன். இவரது மனைவி பெரியபாப்பா, 35. விவசாய கூலி. நேற்று மாலை, 5:30 மணிக்கு ஜெல்மாரம்பட்டியில் வேலை முடிந்து தன் தங்கை மகன் பழனிவேல் என்பவரது டி.வி.எஸ்., விக்டர் பைக்கில் வீடு திரும்பினார். அட்டப்பள்ளம் என்ற இடத்தில், எதிரே வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பெரியபாப்பா பலியானார். படுகாயம-டைந்த பழனிவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பென்னாகரம் போலீசார் விசாரித்து
வருகின்றனர்.

Advertisement