ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.84 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் திருவண்ணாமலை மேம்பாலம் அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநிலம் சத்துாரை சேர்ந்த சின்ன பசய்யா என்பவரின் காரை சோதனை செய்த போது உரிய ஆவணமின்றி, 2 லட்சம் ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


*வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை-யினர், குந்தாரப்பள்ளி - வேப்பனஹள்ளி சாலையில் உள்ள அத்-திகுண்டா சோதனைச்சாவடி அருகே, நேற்று காலை வாகன சோதனை செய்தனர்.அப்போது அவ்வழியாக வந்த கியா காரை நிறுத்தி சோதனை செய்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம், 84,000 ரூபாய் இருந்தது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அப்ப-ணத்திற்கு உரிய ஆவணங்களை காட்டுமாறு பறக்கும் படையினர் கேட்டனர்.
அவரிடம் ஆவணம் இல்லாததால், அப்பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், சூளகிரி தாலுகா அலுவல-கத்தில், வேப்பனஹள்ளி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணியிடம்
ஒப்படைத்தனர்.

Advertisement