தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு 4 பூத்களில் தபால் ஓட்டுப்பதிவு
கோபி : கோபி சட்டசபை தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபடும், 1,484 பேருக்கான தபால் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.
கோபி சட்டசபை தொகுதி தேர்தல் பணியில், 1,484 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களில் கோபி தொகுதி மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள பிற தொகுதி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதனால் அவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு, கோபி பழனியம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மொத்தம் நான்கு ஓட்டுச்சாவடிகளில் நேற்று நடந்தது.
அதேசமயம் தபால் ஓட்டுப்பதிவு செய்ய சென்றவர்களின் மொபைல்போன்கள், ஓட்டுச்சாவடிக்கு வெளியே நியமிக்கப்பட்டிருந்த பணியாளர் ஒருவரிடம் வழங்கி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின் ஓட்டுப்பதிவு முடிந்த பின், அவரவர் போன்களை வாங்கி சென்றனர். தபால் ஓட்டுப்பதிவு நடந்த நான்கு ஓட்டுச்சாவடிகள் முன், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
மேலும்
-
தொகுதி முழுவதும் அ.தி.மு.க.,விற்கு அமோக வரவேற்பு: கார்த்திக் நம்பிக்கை
-
கத்தி முனையில் ரூ.60,000 பறித்த மூன்று பேர் கைது
-
மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்: அனகை முருகேசன்
-
பொறுப்பை உணர்ந்து பணி செய்வேன் :அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் உறுதி
-
மணலியில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மண்டலம்: அ.தி.மு.க., வேட்பாளர் கே.குப்பன் வாக்குறுதி
-
ரூ.80 லட்சம் நிலமோசடி வழக்கில் சாட்சி கையெழுத்திட்டவர் கைது