தொகுதி முழுவதும் அ.தி.மு.க.,விற்கு அமோக வரவேற்பு: கார்த்திக் நம்பிக்கை
திருவொற்றியூர்:திருவொற்றியூர் அ.தி.மு.க., வேட்பாளர் கே.குப்பனுக்கு, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு சேகரித்து, காஞ்சிபுரம் மண்டலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும், அ.தி.மு.க., கவுன்சிலரான கே.கார்த்திக், தொகுதியில் நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன்படி, 6வது வட்டம் வடக்கு செயலர் வேலாயுதம் தலைமையில், சுப்பிரமணியம் நகர், மதுரா நகர், பொன்னியம்மன் நகர், சரஸ்வதி நகர், பூம்புகார் நகர் உள்ளிட்ட பகுதிகளில், கவுன்சிலர் கார்த்திக் வாகனத்தில் பிரசாரம் செய்தார். அவருக்கு, மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் துாவியும் வரவேற்றனர்.
பின், கவுன்சிலர் கார்த்திக் கூறியதாவது:
தொகுதி முழுதும், அ.தி.மு.க.,விற்கு அமோக வரவேற்பு உள்ளது. மக்கள் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க தயாராகி விட்டனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழக முதல்வராக பழனிசாமி பதவியேற்பார்.
ஐந்தாண்டுகளில், கஞ்சா புழக்கம், பாலியல் வன்கொடுமை, விலைவாசி உயர்வு, வரி உயர்வு, மக்கள் பணிகள் மந்தம் என, பல்வேறு பிரச்னைகளால், தமிழக மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் நிச்சயம் இரட்டை இலைக்கு ஓட்டளிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
2021 தேர்தலை விட கூடுதலாக ஓட்டளித்தோர் 20 லட்சம் பேர்!
-
பழங்குடியின பெண்கள் 'குடம் கவிழ்ப்பு' போராட்டம்
-
ஓட்டுப்பதிவால் வனத்துறை சுற்றுலா தலங்கள் மூடல்
-
நீலகிரியில் விறு ,விறுப்பாக நடந்த தேர்தல்; 78.49 சதவீதம் ஓட்டு பதிவு
-
ஊஞ்சலாடிய போது விபரீதம் ;கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் பலி
-
ஓட்டளிக்க முடியவில்லை: வனத்துறையினர் ஏமாற்றம்