அவிநாசி பிளேக் மாரியம்மன் பூச்சாட்டு விழா
அவிநாசி:அவிநாசி, தாமஸ்புரம், பிளேக் மாரியம்மன் கோவில் 114ம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
இதனையொட்டி, கடந்த 8ம் தேதி பூச்சாட்டு மற்றும் கம்பம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 114ம் ஆண்டு திருவீதி உலா, தீர்த்தக்குடம், சிம்ம வாகனத்தில் அம்மன் ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. படைக்கலம் எடுத்து அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் விழா, கம்பம கங்கையில், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மஞ்சள் நீர் விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. கோவில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பொங்கல் பூச்சாட்டு விழாவையொட்டி, அவிநாசி, தாமஸ்புரம், பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்; சிறப்பு அலங்காரத்தில் பிளேக் மாரியம்மன்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும்' : சி.வி.சண்முகம் உறுதி
-
உலக ஆட்டிசம் தினம் விழிப்புணர்வு மாரத்தான்
-
ஈரான் ஐம்பது நாட்களாகியும் நடக்காத உச்ச தலைவரின் இறுதி சடங்கு
-
தேர்தல் வரலாற்றில் முதல் முறை ஓட்டுச்சாவடிகளில் 'கலர் பாதை'
-
'கமகம' மணத்துடன் தேர்தல் விழிப்புணர்வு
-
மேற்கு வங்க தேர்தல்; ரயில்கள் ஹவுஸ்புல்
Advertisement
Advertisement