வீடுகளில் கருப்பு கொடி தி.மு.க.வினர் போராட்டம்
திருப்பூர்:நாட்டின் லோக்சபா பதவிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும், தொகுதி மறுவரையறை வாயிலாக, பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் விதமாகவும் மத்திய அரசு சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டம் வாயிலாக, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று இந்த சட்டத்துக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அவ்வகையில் திருப்பூர் நகரப் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. தாராபுரம் ரோடு பகுதியில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் இந்த நகல் எரிப்பு நடந்தது. நேற்று தேர்தல் பிரசாரத்தின் போதும் தி.மு.க. நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
மேலும்
-
பென்ஜமினை வரவேற்ற அ.ம.மு.க., கவுன்சிலர் கிரிதரன்
-
தெற்காசிய டேபிள் டென்னிஸ் தங்கம் வென்றார் சென்னை வீரர்
-
பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் சேதம்
-
பிரச்னை என்றால் போன் பண்ணுங்க விசிட்டிங் கார்டு அளித்து ஓட்டு சேகரிப்பு அமைச்சர் ரமணா புதுயுக்தி
-
விடுபட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற முதல்வராக மீண்டும் ஸ்டாலின் வரவேண்டும்
-
கே.ஜி.கண்டிகையில் குற்ற செயல்களை தடுக்க புதிய காவல் நிலையம் அமையும் தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி