மிதமான மழைக்கு இன்று வாய்ப்பு
சென்னை: 'தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வடக்கு சத்தீஸ்கர் முதல், தமிழகத்தின் குமரிக்கடல் வரை, தெலுங்கானா, உள் கர்நாடகம் வழியாக, வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இதர பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில், இன்று முதல் ஏப்., 25 வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
-
பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
-
அரசு பேருந்து மோதி பெண் பலி: ரூ.37 லட்சம் இழப்பீடு தர உத்தரவு