கருநிலம் சாலை சந்திப்பில் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் சாலை சந்திப்பில் மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிங்கபெருமாள் கோவில் - கொண்டங்கி சாலை 10 கி.மீ., உடையது. இந்த சாலையை மருதேரி, கருநிலம், கோவிந்தபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை நெல்லிக்குப்பம் -- திருப்போரூர் சாலையின் இணைப்பு சாலையாகும்.

இந்த சாலையில் கருநிலம் கிராம எல்லை முடிவில் இருந்து கொண்டங்கி வரை மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே இந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.



--------

Advertisement