உலக ஆட்டிசம் தினம் விழிப்புணர்வு மாரத்தான்

புதுச்சேரி: உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ரீ பார்ன் மல்டி ஸ்பெஷாலிட்டி தெரபி சென்டர் சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாரத்தான் கடற்கரைச் சாலை காந்தி சிலை முன் துவங்கி, செஞ்சி சாலை, சுப்பையா சாலை வழியாக காந்தி சிலையை வந்தடைந்தது. ​ ஆண் மற்றும் பெண் என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் சதிஷ், அரிஷ், பிரேம் குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பெண்கள் பிரிவில் மெசரத் மென்கிஸ்து, பிரீத்தி, சோனாலி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ​மாரத்தானில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ரீ பார்ன் இயக்குனர் மகாலட்சுமி, இணை இயக்குனர் தினேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement