தேர்தல் வாகன சோதனை :ரூ.3.10 லட்சம் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட வாகன சோதனையில், 3.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், நிலையான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து, சென்னை நோக்கி சென்ற காரில், உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட, 3.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம், கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம், அங்குள்ள சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement