கொரோனா ஊரடங்கில் உயிரை பணயம் வைத்து உதவிய என்னை மக்கள் மறக்க மாட்டார்கள் திருவொற்றியூர் அ.தி.மு.க., வேட்பாளர் குப்பன் நம்பிக்கை
திருவொற்றியூர்:''கொரோனா ஊரடங்கு காலத்தில் உயிரை பணயம் வைத்து உதவிய என்னை, திருவொற்றியூர் தொகுதி மக்கள் நிச்சயம் மறக்கமாட்டார்கள்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் கே.குப்பன் நம்பிக்கை தெரிவித்தார்.
திருவொற்றியூர் தொகுதியில், 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த, இரண்டு முறை எம்.எல்.ஏ., பதவி வகித்த கே.குப்பனை, அ.தி.மு.க., களமிறக்கியுள்ளது. இதனால், தி.மு.க., கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் வேட்பாளர் உள்ளிட்ட பலரும் திறணுகின்றனர்.
மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில், தொகுதி முழுதும் குப்பன் சுற்றிசுற்றி பிரசாரம் செய்து வருகிறார். சங்க நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.
பிரசாரத்தின்போது, குப்பன் கூறியதாவது:
கொரோனா காலத்தில் மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு திண்டாடினர். பல வீடுகளில் அன்றாட உணவுக்கே சிரமம் ஏற்பட்டது. அந்த நேரம் உயிரை பணயம் வைத்து, 30 நாட்களுக்கு மேலாக, பல லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை எண்ணுார், மணலி என, தொகுதி முழுதுமே வழங்கினேன். பேரிடர் காலத்தில் உதவிய என்னை மக்கள் நிச்சயம் மறக்கமாட்டார்கள்.
தொகுதியில், அமோனியா வாயு கசிவு, முகத்துவாரத்தில் டவர் அமைப்பால் பாதிப்பு, சுடுநீர் கலந்த ஆலை கழிவுகளால் மீன்வளம் பாதிப்பு, சி.பி.சி.எல்., நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், மக்களோடு மக்களாக நின்ற எனக்குதான் நிச்சயம் ஓட்டளிப்பர்.
அமைச்சரால் கொண்டு வரமுடியாத திட்டங்களைக்கூட, இரு முறை எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்த என்னால் கொண்டு வர முடிந்தது. அதற்கான வழிமுறைகள் எனக்கு தெரியும். எனவே, மக்கள் என்னை வெற்றி பெற செய்வர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு குப்பன் கூறினார்.
***
மேலும்
-
6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள்: சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
-
மகனை முதல்வராக்குவது தான் ஸ்டாலின் குறிக்கோள்: ஈரோடு ரோடு ஷோவில் அமித்ஷா பேச்சு
-
தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்
-
இலங்கையில் சிபிஆருக்கு உற்சாக வரவேற்பு
-
வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு: கடைசி நேரத்தில் விஜய் திடீர் முடிவு