மகனை முதல்வராக்குவது தான் ஸ்டாலின் குறிக்கோள்: ஈரோடு ரோடு ஷோவில் அமித்ஷா பேச்சு
ஈரோடு: மகனை முதல்வராக்குவது தான் முதல்வர் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் என ஈரோட்டில் ரோடு ஷோவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாஜ வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ நடத்தினார். அவர் சிவகிரி அரசு மருத்துவமனை முதல் தீரன் சின்னமலை சிலை வரை ரோடு ஷோவில் ஈடுப்பட்டார். அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த பாஜவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாஜவினர் மத்தியில் அமித்ஷா ஹிந்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதற்கு திமுக, காங்கிரஸ் சதியே காரணம். நான் இதனை அனுமதிக்க மாட்டேன், நிச்சயம் நிறைவேற்றப்படும். பெண்களுக்கு உரிமையைக் கொடுக்க மகளிர் மசோதாவை கொண்டு வந்த போது திமுக அதை நிறைவேற்ற விடவில்லை.
அதிமுக உடன் இணைந்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. மகனை முதல்வராக்குவது தான் முதல்வர் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள். கருணாநிதி, பின் அவரது மகன் ஸ்டாலின் தற்போது அவரது மகன் என குடும்ப அரசியல் தொடர்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
ஈரோடு மொடக்குறிச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ; தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
லைவ் வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்
மகனை கிரிக்கெட் வாரியத்திற்கு தலைவர் ஆக்குவதுதான் நம்ம குறிக்கோள்
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பார்கள், அப்படிப் பார்த்தால் இவர் முழு வைத்தியன்!
மகனை முதல்வராக்குவது தான் ஸ்டாலின் குறிக்கோள்: அமித்ஷா பேச்சு தவறு. ஸ்டாலின் உயிருடன் இருக்கும்போது எப்படி மகனை முதல்வராக்க்குவார்? ஸ்டாலின் இறந்த பிறகு உதயநிதி முதல்வராவார். உதயநிதி தனது மகனை துணை முதல்வராக்க்குவார். உதயநிதி இறந்த பிறகு உதயநிதி மகன் முதல்வராவார். இதுதானே விடியல் ஆட்சியின் மன்னராட்சி சாசனம்.
ஒரு காலத்தில் கருணாநிதியும் இதைத்தான் சொன்னார். நேரு பிரதமர், நேருவின் மகள் பிரதமர், நேருவின் பேரன் ராஜிவ் காந்தி பிரதமர் இது என்ன மக்கள் ஆட்சியா? அல்லது மன்னர் ஆட்சியா? என்றார். பின்னர் அதையே தானும் செய்தார். தனது மகன் ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, தினகரன் பத்திரிகை நிறுவனர் KP கந்தசாமி போன்ற அநேகரை திமுகவுக்கு அதிகமாக உழைத்த அனைவரையும் கட்சியை விட்டே விரட்டினார். பின்னர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கினார் இனி உதயநிதி தனது மகனை துணை முதல்வர் ஆக்குவார்.
ஆனால் காமராஜர் தனது சகோதரியின் மகனை தனது வாரிசாக ஆக்கி துணை முதல்வர் ஆக்கவில்லை.
எப்படி உங்க மகனை பி சி சி ஐ தலைவர் ஆக்குன மாறியா ? இப்போ ஐ சி சி தலைவர் ஆகிட்டீங்க ? ஐ பி எல் ல நல்ல சம்பாதிக்கிறார் ....
பாருங்க சார், கிரிகெட் ஆடாதவர்கள், படிச்சு நடுவர்கள் ஆகலாம், ஆனால் இவரு பையன் ஜெய்ஷா பிசிசிஐ, மற்றும், ஐசிசி, தலைவர் ஆகலாம், ஆனால், உதயநிதி, எம் எல் ஏ, ஆக கூடாதா?? இந்தியாவில், கட்சி தலைவர்கள், அவர்களின், வாரிசுகள், அமைச்சர், முதல்வர், பிரதமர், போன்ற பதவிகளை, ஏற்க கூடாது, என்று எந்த சட்டமும், இல்லை, நீங்க வேண்டுமானால், ஒன்னு செய்யுங்க, புண்ணியாம, போகும் அப்பா அரசியல் கட்சி தலைவரா இருந்தா, அவங்க வாரிசுகள், யாரும் எம்.எல்.ஏ, எம்.பி,ஆகாகூடாது, என்று அரசியல் சாசனத்த, மாற்றி எழுதுங்க, தேவையில்லாம. வேறு விசயங்களுக்கு, சாசனத்தை மாற்றி மசோதாவ கொண்டுவந்து, தோல்வியடைந்து, முகத்தில் கரியை பூசிகொள்கிறீர்கள், வாரிசு அரசியலை எதிர்க்கிற நீங்கபாஜக அந்த வாரிசு, அமைச்சர் தடைசட்டத்தை, கொண்டு வந்து, அதை எதிர்ப்பவன் முகதிரையை, கிழிக்கலாமே?? செய்விங்களா,
உங்கமகன் கிரிக்கெட் BOARD இல் அடிக்கிற காசைவிட, முதல்வர் அடிக்க முடியாது.
உங்க மகனை என்னவா ஆக்கிருக்கிங்க?. எல்லாமே போலிவேசம்
தகப்பனுக்கு எல்லாம் மகனை பதவியில் வைப்பது தான் குறிக்கோள், ஆனால் உங்கள் குறிக்கோள் எல்லாம் ஊழல் செய்த அமைச்சர்களை நடவடிக்கை எடுக்காமல் வெளியே விடுவது தானே. அதனால் நீங்கள் பேசுவதற்கு தகுதி கிடையாது.
பாஜக மற்றும் பிற தேசிய கட்சிகள், பாமக மற்றும் நடிகர்களின் கட்சிகள் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது. குறிப்பாக பாஜக இங்கிருந்து வேரோடு பிடுங்கப்பட வேண்டும்
தயவுசெய்து சென்று உங்கள் பாஜக ஆளும் மாநிலங்களைச் சரிபார்க்கவும். இந்த ஆட்கள் நமது தமிழ்நாடு மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களின் வரிகளைச் சுரண்டுகிறார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லா வகையிலும் பின்தங்கியுள்ளன. நீங்கள் இந்த மாநிலங்களை மேம்படுத்திவிட்டு, பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வாருங்கள்.மேலும்
-
வேட்பாளர்கள் வாகன பேரணி நெரிசலில் திணறிய மக்கள்
-
கட்டத்தை உடைத்து முதல்வரானேன் 2வது முறையும் ஆட்சிக்கு வரப்போகிறேன்: கார்த்திக் மோகனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
-
தமிழக மக்கள், பெண்களுக்கு பாதுகாப்பு தருவது அ.தி.மு.க.,தான் :பென்ஜமின் பிரசாரம்
-
இரட்டை இலைக்குதான் ஓட்டு பதிவானதா என்று சரிபார்த்து கொள்ளுங்கள்: வளர்மதி வேண்டுகோள்
-
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு :சகோதரர்கள் 'போக்சோ'வில் கைது
-
மீனம்பாக்கம் - நங்கநல்லுார் இடையே 40 நிமிடம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு