6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள்: சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

65


சென்னை: சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கையில் 6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள் இடம் பெற்று உள்ளன.

சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். முக்கிய அறிவிப்புகள் விபரம் பின்வருமாறு:

* புதிதாக 1,000 மினி பஸ்கள் இயக்கப்படும்.

* மெட்ரோ விரிவாக்க பணிகள் 2028க்குள் நிறைவு செய்யப்படும்.

* சென்னையில் 2029க்குள் உலகத் தரம் வாய்ந்த எழில்மிகு சாலைகள் அமைக்கப்படும்.

* ஏஐ, அனிமேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கான மையம் அமைக்கப்படும்.

* உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு, உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி மையம், அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* 20 ஆயிரம் உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* கால்நடை டாக்டர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.

* தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவுப்படுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.

* எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10க்கு மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும்.

* மழை நீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.

* பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும்.

* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.

* அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெரு விளக்குகள் அமைக்கப்படும்.

* கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.

Advertisement