சீனியர் லீக் கால்பந்து போட்டி: சென்னை போலீஸ் அபாரம்

சென்னை:சென்னையில் நடந்து வரும் ஆடவர் சீனியர் லீக் கால்பந்து போட்டியில், சென்னை சிட்டி போலீஸ் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், ஆடவருக்கான சீனியர் லீக் கால்பந்து போட்டி, பாவேந்தர் பாரதிதாசன் மைதானத்தில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த முதல் போட்டியில், சென்னை சிட்டி போலீஸ் அணி, சென்னை சுங்கத்துறை அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான அந்த ஆட்டத்தில், சென்னை சிட்டி போலீஸ் அணி, எதிர் அணியின் வீரர்களை பந்தாடினர்.

முதல் பாதியில், இரு அணிகளுக்கும் எந்த கோலும் கிடைக்கவில்லை. போட்டி முடிவில், சென்னை சிட்டி அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில், சென்னை சுங்கத்துறை அணியை வீழ்த்தியது.

அடுத்த போட்டியில், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணி, தாவூத் நினைவு அணியை எதிர்கொண்டது. அதில், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணி வென்றது.

Advertisement