சென்னை சூப்பர் லீக் கால்பந்து :பச்சையப்பாஸ் எப்.சி., அபாரம்
சென்னை:சென்னையில் நடந்த சென்னை சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், பச்சையப்பாஸ் எப்.சி., அணி மூன்று கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், சென்னை மாவட்ட கிளப்களுக்கு இடையிலான சூப்பர் லீக் கால்பந்து போட்டி, சென்னை லயோலா கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகிறது.
இதன் நேற்றைய போட்டியில், பச்சையப்பாஸ் எப்.சி., அணி, அசோக் லேலண்ட் அணியை எதிர்கொண்டது. துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பச்சையப்பாஸ் எப்.சி., அணி, எதிர் அணிக்கு கோல் அடிக்க இடமளிக்காமல், 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அடுத்து நடந்த போட்டியில், நேதாஜி அணி, மதர்ஸ் எஸ்.எஸ்.எஸ்., அணியை எதிர்கொண்டது. இப்போட்டி முடிவில், நேதாஜி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் போராடி வெற்றிபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement