டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் வெற்றி ஐ.ஏ.எஸ்., மாணவர்கள் சாதனை
சேலம், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில், வெற்றி ஐ.ஏ.எஸ்., மையத்தில் படித்த மாணவர்கள், முதல் நான்கு இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து, வெற்றி ஐ.எ.எஸ்., மைய இயக்குனர் சண்முகம் கூறியதாவது:-
சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி உதவி கமிஷனர் உட்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 78 பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., மூன்று கட்டங்களாக நடத்தியது. இந்த தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், சென்னை அண்ணா நகரில் உள்ள, வெற்றி ஐ.ஏ.எஸ்., கல்வி மையத்தில் படித்த, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதில், மதுரையை சேர்ந்தவர்களான சுபத்ரா, 4-ம் இடம்; அருண், 5ம் இடம்; கோவையை சேர்ந்த லாசன் இஸ்ரேல், 7ம் இடம்; விருதுநகரை சேர்ந்த சித்தார்த், 10ம் இடம் பிடித்துள்ளனர்.
சாதனை பயணத்தின் தொடர்ச்சியாக, குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்பு, நாளை, (ஏப்., 20) மற்றும் மே, 1 தேதிகளில், சென்னையில் தொடங்கப்பட உள்ளது. எங்கள் மையத்தின் சென்னை, சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி கிளைகளில், மே, 1- முதல் இப்பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், 9884421666, 9884432666 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்
-
'அறிவை பட்டை தீட்டும் பட்டறையாக உருவெடுக்கும்' கடல் தாமரை புத்தக பூங்கா குறித்து சாந்தி புகழாரம்
-
இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி