சைதாப்பேட்டையில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: அ.ம.மு.க., வேட்பாளர் செந்தமிழன் நம்பிக்கை

சைதாப்பேட்டை;''சைதாப்பேட்டையில், நான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்,'' என, அ.ம.மு.க., வேட்பாளர் செந்தமிழன் கூறினார்.

சைதாப்பேட்டை அ.ம.மு.க., வேட்பாளர் செந்தமிழன், தொகுதி முழுதும் ஓட்டு சேகரித்து வருகிறார். பிரசாரத்தின் போது செந்தமிழன் கூறியதாவது:

அ.ம.மு.க.,வின் துணை பொது செயலராக இருப்பதுடன், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - த.ம.க., - ஐ.ஜே.கே., புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன்.

இதனால், கூட்டணி கட்சியினர் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்து பணி செய்கின்றனர். நான் பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, அரசு பள்ளிகளில் ஆர்வோ வாட்டர் கொண்டு வந்ததுடன், மாணவ - மாணவியருக்கு ஆங்கில அகராதி கொடுத்தேன்.

தற்போது, நான் செல்லும் இடமெல்லாம், வாக்காளர்கள் அமோக வரவேற்பு கொடுப்பதால், அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது, அ.தி.மு.க.,வில் மோகன், கதிர்முருகன், ஷேக் அலி, பா.ஜ.,வில் காளிதாஸ், பா.ம.க.,வில் திலகர், கோபி, புரட்சி பாரதம் கட்சியில் ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement