பெண்ணிடம் ஆபாச சைகை இருவர் கைது
கிண்டி: கடந்த 14ம் தேதி, 33 வயது பெண், கிண்டி, ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணவரின் வருகைக்காக, அலுவலகத்தின் வெளியே காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த இரண்டு பேர், ஆபாசமாக சைகை காட்டி அழைத்ததால், அப்பெண் சத்தம் போட்டார். ஆனால், கணவர் வருவதற்குள் அவர்கள் தப்பி சென்றனர்.
புகாரின்படி வழக்கு பதிந்த கிண்டி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்ததில், கிண்டி, அருளாயன்பேட்டையை சேர்ந்த மனோகர், 25, தனசேகர், 25, என தெரிந்தது.
நேற்று, இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புற்றுநோய் பாதித்த சிறுவன் சி.பி.எஸ்.இ., தேர்வில் 96.6%
-
விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்
-
மதமாற்ற பிரச்னையால் மஹா., தனியார் நிறுவனம் தற்காலிக மூடல்!: வீட்டிலிருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு உத்தரவு
-
எம்.சி.டி., மேயர் தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கிறது
-
பயோமெட்ரிக் வருகை பதிவேடு அரசு ஆபீஸ்களில் இனி கட்டாயம்
-
'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் கோர்ட்டில் ஆஜரானார் கெஜ்ரிவால்
Advertisement
Advertisement