திருக்கழுக்குன்றம் தேர் பராமரிப்பு பணி துவக்கம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேர் பராமரிப்பு பணிகள் துவங்கின. திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா உத்சவம், வரும் 21ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. அதன் முக்கிய உத்சவங்களில் ஒன்றான, பஞ்சமூர்த்தி சுவாமியர் திருத்தேர் உலா, வரும் 27ம் தேதி நடக்கிறது.
இந்த உத்சவத்திற்கான வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமியர் திருத்தேர்கள், கோவிலுக்கு வெளியே, சாலை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், திருத்தேர் உத்சவம் முடிந்து, தேர்கள் இரும்பு தடுப்புகளால் மூடப்படும்.
தற்போதைய உத்சவத்திற்கு, தேர்களை பராமரித்து தயார்படுத்த, அவற்றை மூடியிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புற்றுநோய் பாதித்த சிறுவன் சி.பி.எஸ்.இ., தேர்வில் 96.6%
-
விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்
-
மதமாற்ற பிரச்னையால் மஹா., தனியார் நிறுவனம் தற்காலிக மூடல்!: வீட்டிலிருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு உத்தரவு
-
எம்.சி.டி., மேயர் தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கிறது
-
பயோமெட்ரிக் வருகை பதிவேடு அரசு ஆபீஸ்களில் இனி கட்டாயம்
-
'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் கோர்ட்டில் ஆஜரானார் கெஜ்ரிவால்
Advertisement
Advertisement