சோற்றுத்துறை நாதர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யானம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் அன்னபூரணி தாயார் உடனமர் சோற்றுத்துறை நாதர் கோவிலில், 14ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதில், சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேக வழிபாடு நடந்தது.
முளைப்பாரி மற்றும் சீர்த்தட்டம் அழைத்து வரும் நிகழ்வு நடந்தது. வேள்வி, பொற்சுண்ணம் இடித்தல், வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் போன்றவைகள் நடந்தது.
கோவிலில், மதியம், இறைவன் இறைவி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொன் ஊஞ்சல் வழிபாடு, அன்னம்பாலிப்பு நடந்தது. மாலையில், வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடந்தது. நிறைவாக, கைலாய வாக்கியத்துடன் சுவாமி திருத்தேர் திருவீதி உலா நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க., வெற்றி தெளிவாக தெரிகிறது: கோகுல இந்திரா
-
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் மின்தடை: பொதுமக்கள் அவதி
-
ஊழலற்ற ஆட்சியை விஜய் தருவார்:P த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் பேச்சு
-
இருசக்கர வாகன அணிவகுப்பில் ஓட்டு சேகரித்தார் சிற்றரசு
-
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
-
தவறான சிகிச்சையால் இளம்பெண் இறப்பு? மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை!
Advertisement
Advertisement