பறக்கும் படை பணிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு 

ஆனைமலை: வால்பாறை சட்டசபை தொகுதியில் பறக்கும்படை பணிகளை, தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

வால்பாறை சட்டசபை தொகுதியில், பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க ஒன்பது பறக்கும் படை, ஒன்பது நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாயிலாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இப்பணியை நேற்று தேர்தல் பார்வையாளர் யசேந்திர சிங் ஆய்வு செய்தார். குழுவினர் பணிகளை முறையாக மேற்கொள்கின்றனரா என பார்வையிட்டார். மேலும், தேர்தல் நேரம் என்பதால் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும், என, குழுவினருக்கு அறிவுரை வழங்கினார்.

Advertisement