த.வா.க., வேட்பாளர் கண்ணன் ஓட்டு சேகரிப்பு

வடலுார்: குறிஞ்சிப்பாடி த.வா.க., வேட்பாளர், வடலூர் நகர பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணன், கேமரா சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், ' வடலுாரில் மிகவும் லாபகரமான 'செராமிக்' தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு முன்னுரிமை அளிப்போம். உலக வணிக சந்தைகளின் பார்வையை குறிஞ்சிப்பாடி, வடலுார் பகுதிகளை நோக்கி திருப்புவோம்,' என்றார்.

வடலுார் நகர பகுதிகளான பூசாலிக்குப்பம், ஆபத்தாரணபுரம், ஜெயப்பிரியா நகர், என்.எல்.சி ஆபிசர் நகர், சேராக்குப்பம், ராகவேந்திரா சிட்டி, எம்.ஜி.ஆர் நகர், அன்னை சத்தியா வீதி, பார்வதிபுரம், இந்திரா நகர், ஜோதி நகர், சாந்தி நகர், சிப்காட், வள்ளலார் நகர், கோட்டக்கரை, மாருதி நகர், புது நகர், காட்டுக்கொல்லை, வானவில் நகர், முல்லை நகர், ஆர்.சி காலனி, எம்.கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார். அவருடன் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement